எல்கைக்குள்தானே இருக்கின்றாய்
கவிஞனே கலைஞனே எழுத்தின்பால் என்றும் இளஞனே
முத்தமிழ் அறிஞனே இராவணன் உனக்கு
குளிர்த்தமிழின் வீரனே
அண்ணாவின் அகப்பைக்குள் ஒளிந்திருந்த அமிர்தமே
கண்ணா நீ கலந்தாயோ காற்றோடு
வானகிணருக்குள் வற்றாத நீர் குடிக்க போனாயோ
ஞானகளஞ்சியமே
இயற்கைத்தாய் உன்னை இனம் கண்டுகொண்டாளோ
இந்திரலோகத்தில் தமிழ்ப்பற்று குறையுதென்று
மந்திரகைற்றால் உன்னை மாண்டிட வைத்தாளோ
சந்தன துண்டோடு சவக்குழியில் வைத்தாளோ
சமூக நீதியை வைகுண்டம் அழைத்தாளோ
கட்டுமரமாய் மிதப்பேன் என்றாயே
கடல் வற்றி போய்விட்டதோ
மணல் தரையை மணந்துவிட்டாய்
முத்தமிழின் வித்தகரே மு கருணாநிதியே
சத்திய சீலனே சவமாய் ஆனாயோ
நட்புக்கு இலக்கணமாய் கவியரசர்
வழுக்கை என்று வர்ணித்தபோது
அழுக்கை அகற்றி உண்ணும் மீன்போல
இயற்கை சிரிப்போடு இசைந்து நின்றாய்
இரக்கமில்லா வடிவாக வந்ததையா உம் இறப்பு
இயற்கை தாய்மேல் இன்றுமுதல் எமக்கு வெறுப்பு
கொள்கைக்கு புறம்பாக நீர் ஓர் போதும் போனதில்லை
என்றும் நீர் எம் எல்லைக்குள் தானே இருக்கிறீர் -கவலையில்லை