கிள்ளை பதிக்கும் முத்தம்

கிள்ளை பதிக்கும் முத்தம்
*************************************************************

பால்நிலவின் குளிரொளியில் கிடைக்கும் அப்பரவசமும்
பைங்கிளியின் கொஞ்சலில் மலர்கின்ற புதுச்சுகமும்
பொன்வண்டு சுற்றிவர நாம்அடையும் பெருங்களிப்பும்
சோலைக்குயில் கானமழை தணித்திடும் தாகமதும்
துள்ளிவிழும் அருவிதனில் குளித்திடும் ஆனந்தமும் -- நம்
கிள்ளையது பதித்திடும் முத்தத்திற்கீடாமோ

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Aug-18, 7:54 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57
மேலே