இந்த உழவினிலே

இந்த உழவினிலே
என்ன கண்டுவிட்டோம்
இந்த உழவினிலே
எதை கொண்டுவிட்டோம்
மன்றாடி மன்றாடி உழைத்து உழைத்து என்ன தான் சேர்த்துவைத்தோம்
கடன் கடன் என்ற பாரம் மட்டும் என் நெஞ்சை பிழிகின்றதே
வயிற்றிற்கு இந்த அரை கஞ்சி தான் கண்டோமே
என்றும் ருசியோடு உண்டதில்லை
நாங்கள் உண்ணும் உணவு திடத்திற்கு பஞ்சமில்லை
நாங்கள் உழைக்கும் உழைப்பு என்றும் நேர்மைக்கு வஞ்சம் வைத்ததில்லை
என்றும் கட்டிகாக்கும் பண்பாடு நாங்கள் விட்டுகொடுத்ததில்லை
உறவுகளை பேண மறந்ததில்லை
நட்புக்களை என்றும் விட்டுகொடுத்ததில்லை
ஆனால் எங்கள் வாழ்வு மட்டும் இன்னும் விடிந்த பாடில்லை
விடியலுக்காக காத்திருந்து உருண்டோடின நாட்கள் தானே
இந்த உழவினிலே
உழைப்பையும் நிலத்தையும்
வாரி வாரி வழங்கிவிட்டோம்
இந்த பாருக்கே
மீண்டும் கிடைத்தது
கண்ணீரும் வறுமையும்
இன்னும் எங்கள்
உயிர் மட்டுமே மிஞ்சவே
இன்னும் என்ன வென்று சொல்வது
இந்த உழவினிலே
என்ன கண்டுவிட்டோம்
இந்த உழவினிலே

எழுதியவர் : பிரகதி (12-Aug-18, 9:15 pm)
சேர்த்தது : பிரகதி சி
பார்வை : 315
மேலே