கனி கனிதா

ஏன்டா மகனே மருது, உனக்கு நல்ல காலம் பொறந்திருக்குதடா?
😊😊😊😊
என்னப்பா சொல்லறீங்க?
😊😊😊😊😊
உன் மனைவி இஞ்சியம்மாளுக்கு மொதல் பிரசவத்திலயே ரட்டைக் குழந்தை பொறந்திருக்கு. மகாலட்சுமிங்கடா. நல்ல தமிழ்ப் பேருங்களா வைடா மருது?
😊😊😊😊
அப்பா நான் பத்தாம் வகுப்பே தேறாதவன். மெத்தப் படிச்ச தமிழர்களே அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்ல. எனக்கென்ன பைத்தியமா தமிழ்ப் பேருங்களக் கொழந்தைகளுக்கு வைக்கிறதுக்கு?
😊😊😊😊
சரிடா மருது உன் விருப்பம். தலைக்கு மேல வளந்த பையன் நீ. சரி, நீயும் இஞ்சியும் கொழந்தைங்களுக்குப் பேர முடிவு பண்ணீட்டீங்களா?
😊😊😊😊
உம். ஒரு குழந்தை பேரு கனி. இன்னொரு குழந்தை பேரு கனிதா.
😊😊😊😊
கனி. கணிதா. அருமையான தமிழ்ப் பேருங்களா இருக்குதே.
😊😊😊😊
தமிழ்க் கனி, தமிழ்க் கணிதா இல்லங்க அப்பா. ரண்டும் இந்திப் பேருங்க. பெயர் விற்பனை மய்யத்தில ரண்டு பேருங்களையும் இருபதாயிரம் கொடுத்து ஏலத்தில எடுத்தேன்.
😊😊😊
பேருங்களக்கூட ஏலம் விடறாங்களா?
😊😊😊😊
பிறமொழிப் பேருங்கள வைக்கத் தெரியாதவங்களுக்கும் புதுமையான பிறமொழிப் பேருங்களுக்கு ஆசைப்படறவங்களுக்காவும் சென்னையில பிறமொழிப் பெயர் மய்யத்தை ஆரம்பிச்சிருக்காங்க அப்பா.
😊😊😊😊
சரி, சரி. எம் பேத்திங்க நல்லா இருந்தா சரி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் (கலப்படத்) தமிழைத் தவிர்ப்போம். தமிழுணர்வை வளர்ப்போம்.

எழுதியவர் : மலர் (13-Aug-18, 7:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 136

மேலே