எது சுதந்திரம்

எது சுதந்திரம்?
போராடி போராடி உரிமையை பெறுவதா
காசு கொடுத்து கல்வியை பெறுவதா
மரத்தை வெட்டி நிழலை பெறுவதா
நிலத்தை விற்று உணவை பெறுவதா

எது சுதந்திரம்?
தைரியத்தை தொலைத்த பின்னும் வீரம் பேசுவதா
சாதியை வளர்த்த பின்னும் சமத்துவம் பேசுவதா
இறைத்தன்மையை இழந்த பின்னும் ஆண்மிகம் பேசுவதா
பழமைகளை அழித்த பின்னும் பாரம்பரியம் பேசுவதா

எது சுதந்திரம்?
சந்தோஷத்தை தொலைத்த பின்னும் நிம்மதியை தேடுவதா
மனிதர்களை இழந்த பின்னும் மனிதநேயம் தேடுவதா
உறவுகளை மறந்த பின்னும் பாசத்தை தேடுவதா
சுதந்திரத்தை பெற்ற பின்னும் சுதந்திரத்தை தேடுவதா

எது சுதந்திரம்? உரைப்பாய் மானிட.......

உரிமையை பெற உரிமை இல்லை
கல்வியை பெற கல்வி இல்லை
நிழல் பெற மரமும் இல்லை
உணவை பெற நிலமும் இல்லை

வீரம் பேச தைரியம் இல்லை
சமத்துவம் பேச தகுதி இல்லை
ஆண்மிகம் பேச இறைத்தன்மை இல்லை
பாரம்பரியம் பேச பழமை இல்லை

நிம்மதி தேட சந்தோசம் இல்லை
மனிதநேயம் தேட மனிதன் இல்லை
பாசத்தை தேட உறவுகள் இல்லை - கடைசியில்
சுதந்திரம் தேடும் சுதந்திரமும் இல்லை.

எழுதியவர் : புவனேஸ்வரி (13-Aug-18, 11:02 pm)
Tanglish : ethu suthanthiram
பார்வை : 4021

மேலே