கதகதக்கும் மௌனங்கள்
அந்தி வானம்
சொட்டு சொட்டாய்
மழை தூவி
சில நேரம் விட்டு
விட்டு இடம் மாறி
ஊசி மழை
தெளித்துக் கொண்டிருக்க
அன்பே நான் உன்னோடு
அலைபேசியில்
உரையாடிக் கொண்டிருக்க
இதயத்தோடு இதயம்
இணைத்து உறவாடிக்
கொண்டிருக்க
கடிகார முட்களும்
நம்மையே கண் விரித்து
பார்த்திருக்க
உன் பேச்சில் சிந்தும்
தேன்மழையில் நான்
தொய்ந்திருக்க
எந்தன் மூச்சி முட்டி
ஒரு பூ இதழ் விரிக்க
தென்றல் தீண்டி என்
தேகம் குளிரில்
சிலிர்த்திருக்க
அவ்வப்போது மட்டும்
நாம் வெப்பம் உணர
நம்மை தொட்டு விட்டு
சென்றதென்ன
கதகதக்கும் மௌனங்கள்....!!!