என் காரணங்கள்
உருகி உருகி
வெளிச்சத்தை
நேசிக்கும் ஒரு
மெழுகுதிரியைப் போல
உன்னை நேசிக்கிறேன்..!
நேசிக்க என்னவென்று
காரணம் கேட்காதே..
சொல்லி முடிப்பதற்குள்
என் ஆயுள் முடிந்து போகலாம்
என் ஆயுள் முடிந்து
கொண்டிருக்கும்
இடைவெளிக்குள்
என் காரணங்கள்
உனக்கு சலித்தும் போகலாம்..