எங்கள் வீட்டு தேவதை
இன்று மட்டும் ஏன்...?
கதிரவன் ஒளிமங்கி
காட்சியளிக்கிறான்...
நிலவுக்கு கூட
விடுமுறையாமே...
அதோ...!
அந்த விண்மீன்களெல்லாம்
உதிரத்துவங்கிவிட்டன
எங்கள்
வீட்டுக்குவரும்
காற்றுகூட
சுவாசம் இழந்தனவோ
சன்னல்
கம்பிகளுக்குக்கூட சண்டை
எங்கள் பூவின்
பூவிரல் பதியாததால்...
அங்கே பால்க்காரன் எழுப்புகின்ற
சத்தங்கள் எல்லாம்...
எங்கள் இல்லத்தில்
நுழையும் போது
ஒப்பாரியாய் கேப்பது ஏன்...?
வாசலில் வந்துவிழும்
செய்தித்தாளில்கூட
செய்திகள் எல்லாமே
கண்ணீரஞ்சலியாய்க் காட்சிப்படுவது ஏன்...?
எங்கள்வீட்டுப் பூக்கள்கூட
புன்னகை மறந்ததே
மலரமுடியாமல்
மௌனம் சாதிக்கிறது...
எங்கள்
வேப்பமரத்தடியில் அமர்ந்த
இறைவனுக்குக் கூட
பூஜைகள் வேண்டாமாம்...!
காரணம் என்னவெனில்
எங்கள் வீட்டு தேவதை
அடுத்தொரு வீட்டில் அல்லவோ அவதரிக்கச் செல்கிறாள்...
அவள் இல்லாது
இல்லத்தில் உள்ளவர்க்கெல்லாம்
இதயம் துடிப்பதில்லை...
எப்படித் துடிக்கும் இதயம்