வாடகை வாழ்க்கை

அந்தி நேரம்
ஆதவன் உறங்கச்செல்லும்
பொழுதினிலே
இவள் விழிகள் விழித்துக்கொள்கிறது
வழிமீது விழி வைத்து பார்க்கிறது
வழிப்போக்கனுக்காக...!

மலிவு விலையில்
சுகத்தை கொடுத்து சொர்கத்தை காட்டும்
இவளின் உள்மனதை யாரறிவார்
இவளின் கனவுகள் கலைந்துப்போனதை
யாரிடம் சொல்வாள்...!

தினம் தினம்
கங்கையொன்று சாக்கடையில் கலந்து அக்கினிப் பிரவேசம் செய்கிறது...!

இவள் சமுதாய அழுக்கை
தின்னும் மீன்
இவளின் மேனியில்
தன் இச்சைகளை
கொட்டிவிட்டு சில காமாசூரன்கள்
ராமவேஷம் போடும் கலிகாலமிது...!

மதுவிலக்கைப்போல்
விலைமாது விலக்கு
அமுலுக்கு வந்தால் குற்றங்கள்
குட்டிப்போட்டுவிடும்
குற்றங்களை தடுப்பதில்
இவர்களுக்கும் பங்குண்டு
ஆனாலும் இதுவும் குற்றமே..!

வைக்கோல் போருக்குள்
வைரத்தை தொலைத்ததைப்போல்
வாழ்க்கையை தொலைத்து விட்டு
இரவில் திரவியம் தேடுகிறாள் தன் பிஞ்சுகளின் கஞ்சிக்காக...!

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Aug-18, 11:27 pm)
Tanglish : vaadagai vaazhkkai
பார்வை : 158

மேலே