இறப்பிலாப் பிறப்பு

இறப்பிலா பிறப்பு (நெகிழி)plastic

பளபளக்கிறாய்!
படபடக்கிறாய்!
பல பயனும் தருகிறாய்!
காலனுக்குக் கீழ்ப்படிந்து
ஏன் பணிய மறுக்கிறாய்?

பொம்மையாகிறாய்!
பல பொருளுமாகிறாய்!
அதை சுமக்கும் பையுமாகிறாய்!
காலம் கடந்த பின்னும்
ஏன் உருமாற மறுக்கிறாய்?

மண்ணில் தவழ்கிறாய்!
மண்ணில் புதைகிறாய்!
மண் வளம் கொழிக்க
பயிர்கள் செழிக்க
ஏன் மக்க மறுக்கிறாய்?

போற்றும்படி குடமுமாகி, குழாயாகி,நீரை ஏற்கிறாய்!
உழவர் தூற்றும் படி
மழைநீரை மண்ஏற்க
ஏன் வழிவிட மறுக்கிறாய்?

பூக்களாகி ,இலைகளாகி
காய்களாகி,கனிகளாகி
கண்ணாலே காண்பதற்கு
கவின் மிகுந்து இருக்கிறாய்!
பொலிவிழந்த பின்னும்
ஏன் அழுக மறுக்கிறாய்?

மெச்சும் படி சாதனைகள்
பல துறையில் புரிகிறாய்!
எரிக்கும் போது மட்டும்
ஏன் நச்சை உமிழ்கிறாய்?

நிலையிலாத உலகில் வந்து
நிலைக்கப் பார்க்கிறாய்!
புலி வாலை பிடித்த கதையாய்
விழித்து நிற்கிறோம்!

எழுதியவர் : Usharani (21-Aug-18, 11:30 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 99

மேலே