நீ என்னை கடந்து செல்வது

நீ என்னை கடந்து
செல்கையில்
தவமென, காதலின் உடல்மொழியற்று
எந்த சமிக்கையும் யின்றி
காதல் தெரிந்துவிட கூடாது
என செல்கிறாய்
நானோ என் காதலை
எப்படியாவது சொல்லிவிடவேண்டுமென்று
வேட்கையில் செல்கிறேன்
நீ அந்த தவத்தையும்
உடல்மொழியையும்
என்னுள் கடத்து
நானும் தெரிந்துகொள்கிறேன்

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 10:54 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 252

மேலே