குருதிப்புனலில் குளித்த நினைவுகள்

அமைதியான இரவினில் ஆகாயம் தீப்பிடித்து
இமைநொடியில் புவிவாழ் உயிர்களை அழிப்பதுபோல்
அதிகாரப் பேய்வீசு அணுக்குண்டின் கனல்மழையில்
நதியோரக் கரையென்று அங்கங்கள் குவிந்தனவே...

பொழில்விரி பூவினங்கள் செம்புனல் குடித்தும்
எழில்நிறை தமிழினங்கள் குருதிக்கடல் மிதந்தும்
கருவில்வளர் சிற்றுயிரும் கற்பிழந்து துடித்தும்
அரும்புகள் வேரறுந்தும் அலைந்த நரகமதுவே...

காளிதேவி காணாத போர்க்களம் அதுவன்றோ?...
காலனவன் கேளாத உயிர்களின் ஓலமன்றே
மனிதத்தை மனுக்கொடுத்து அங்குநின்று தேடுகிறேன்
மனமெல்லாம் ரணங்களில் தோய்ந்தே வாடுகிறேன்...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 8:57 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 80

மேலே