பெண்ணே, உந்தன் கூந்தல் அழகு

பெண்ணே , கார்மேகம்
இறங்கிவந்து உந்தன்
தலையில் கூந்தலானதோ
அந்த கூந்தலின் எழில்கள்
ஒவ்வொன்றும் தனியே
நீராடி நதியின் கரையில்
வீசும் இளங் காற்றில்
ஈரம் போன கூந்தல்
' கட்டோடு குழல் ஆட,,
காற்றில் களிநடம் புரியுதே
பின்னிய கூந்தல் கண்ணதாசன்
எழுதியதுபோல் 'கருநிற நாகமானதே'
அதே கூந்தலை நீ சுருட்டி
குழலாய் கொண்டைப்போட
அதன்மேல் மெல்லிய வலையில்
அடைத்திட பெட்டியில் அடைபட்ட
நாகம்போல் ஆனதே ....
அடர்த்தியான கருங்க்கூந்தல்
உன் அழகுக்கு அழகு கூட்டுதே
கருமுகிலினூடே திகழும்
சந்திர முக்கியோ நீ,முதலில்
கும்குமப் போட்டு கூட்டுதே அழகு
சின்ன இடையில் கொஞ்சும் அழகி
நீ என்றால்- ஆறடி கூந்தலிலும்
உன் அழகு தனியே.






,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Aug-18, 2:12 pm)
பார்வை : 1828

மேலே