என் காதல் கருவாச்சியே

மலராட்சி செய்யும் தோட்டத்தில்
மௌனமாய் வந்த
மதுரை மீனாட்சியே
காஞ்சி காமாட்சியே
தெருவாட்சி புரியும் இருவாட்சிப்பூவே
விற்புருவ ஆட்சியால் என்னை வென்ற கருவாச்சியே
என்னை ஆட்சி செய்ய எப்ப வருவ சொல்லடி
இந்த மாமன் மேல உயிர்மூச்சையே வச்சிருக்கும்
என் காதல் கருவாச்சியே !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-18, 11:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 126

மேலே