என் மரண ஓலை
தேடுகிறாய் தெய்வமே
வீதியெல்லாம்...
உன்னை
வீதியிலே விட்டெறிந்த
பாவியினை...!
கைமாறு கருத்து
நெஞ்சிலே பாலூட்டி
இச்சிறு பிஞ்சை
நீ வளர்த்தாய்
அன்று...
என்னையும் விடவில்லை
பூமியும் இன்று...!
பாவிகளை மன்னிக்கும்
கடவுளே...!
உன்னை
பாவியென்று பாவுரைத்தேன்
அன்று...
மகனே...
மகனே...என்று
மங்காத்தா தமிழ்க்குரலில்
மாறி மாறி நீயழைக்க...
மறுகுரல்
எழுப்பவில்லை நானும்
என் புரியாத வயதுகளில்
உன் பூமடியில்
எனை ஏந்தி
புதுப் புது
கதை சொன்னாய்...!
உதிர்ந்த
இளம் பஞ்சை
ஒன்றாக நீ திரட்டி
நானுறங்க மெத்தை தந்தாய்...
நான்...
உறங்காமல்
உளறி விட்டால்
தரையிலே படுத்தபடி
தாலாட்டு பாடி வைத்தாய்...!
போதுமம்மா.. போதும்...!
உன் பொன்பாதம் பட்டதில்
இந்த பூமியின் பாவங்கள்
பொசுங்கக் கண்டேன்
அன்று...
வெளிநாடு சென்று விட்டேன்
வேண்டிய பொருளீட்ட..!
கோடி கொடிகளாய்
கொட்டி வைத்தும்
இந்தக் கோளை மகன்
ஏழையானேன்...
உன் பாசம் மட்டும்
பாக்கிகளாய்
பக்கத்தில் இருந்ததனால்...!
செல்போன் குரல் எழுப்பி
செல்லமாய் பேசி வந்தேன்
இந்த...
செல்லமகன் குரல் கேக்க
சுவரோரம் வந்தமர்வாய்
அன்றோ...
அந்தக் களிப்பினில்
ஆடித் திரிந்தேன்
ஆனந்தமாய்...
அன்று...
அருகிலிருந்த அனைவருமே
உறவினர்கள்
ஆனால்...
உன்னை மட்டும் நானொதுக்கி
ஓடி ஒளிந்து கொண்டேன்
இன்று...
என் மரண ஓலை வந்தவுடன்
மாரோடு நீயணைத்து
மகனே யென அழுதாய்...!
ஆவியாய் அருகில் வந்து
அழுகின்றேன் தாயே
அந்த...
ஆனந்த உறவுகள்
ஆறாம் நாள்தான் வந்தார்கள்...
வாடிய முகத்தை
வாடகைக்கு வாங்கியது போல்
தாயே...
நான் பிறக்க வேண்டும்
உன்போல் தாயக...!
நீ...
சேயாக பிறக்க வேண்டும்
நான் செய்ததை நீ செய்ய
இந்த...
ஏக்கம் மட்டும்
சுவடுகளாய்
என்னோடு அலைகிறது
உன்பின்னே...!
இந்த ஆவிமகன்
பெயர் சொல்லி
அழுதுகொண்டே இருக்கிறாய்
இன்றும்...!