ருசியானபழம்

தேவதையே உன்னழகை
.....தேயாத நிலவென்பேன்
தேகத்தின் சுவையினை
.....தேனூறும் சுளையென்பேன்

பேதையின் இதழ்களை
.....பேரீச்சம் பழமென்பேன்
போதையேற்றும் விழிகளை
.....பொல்லாத ஆயுதமென்பேன்

அடங்காத கூந்தலை
.....ஆழிப்பேரலை யென்பேன்
அசையும் தேரினை
.....அச்சு வெல்லமென்பேன்

சங்குக் கழுத்தை
.....சுயசரிதை யென்பேன்
சலவைசெய்யும் கரங்களை
.....சதிராடும் மீன்களென்பேன்

வியர்வையின் வாசத்தை
.....விவசாய விதைகளென்பேன்
வளைவான இடையை
....வில்லென்பேன் நதியென்பேன்

என்னவென்றும் சொல்வேன்
.....என் எதிர்காலமென்பேன்
என்றென்றும் எப்பொழுதும்
.....என்னை வென்றவளென்பேன் "...

எழுத்தோடு இணையும்
...#ராஜேஷ்...

எழுதியவர் : ...#ராஜேஷ்... (26-Aug-18, 5:21 pm)
பார்வை : 76

மேலே