எல்லாம் கனவா ............
புல்லாங்குழல் ஓசையின் நடுவே
தித்திக்கும் அவளின் சிரிப்பொலி
ஆழ்மனதில் உறங்கியிருந்த ஆன்மா
உறக்கம் கலைத்து விழிதிறந்து
ஆழ்ந்த நித்திரையின் வாசல்திறந்து
நினைவு வீதியல் ஒத்தையாக
பாதையிலிருந்து விலகுகிறது இருள்
பினால்வரும் நிலவினில் அவள்முகம்
தனிமை இருப்புக்களில் சலனங்கள்
புன்னகையால் போர் தொடுக்கிறாள்
மௌனத்தின் ஓசையற்ற வார்த்தைகளால்
காதருகே சொல்லிச் சிணுங்குகிறாள்
அகம்குளிர்ந்து கூசும் அவளின்வார்த்தைகள்
எதையெதையோ பேசும் பித்தானாக
எங்கங்கோ அழைத்து செல்கிறாள்
விண்ணில் சிறகின்றி பறக்கிறேன்
உலகின் அழகுகளால்அலங்கரித்த்
அவள் குடியிருக்கும் அழகுதேசம்
காதல் தேசத்தை ஆளும்
தேவதைகளின் அரசி அவள்
அவள் இதையச் சிறையில்
இன்றுமுதல் காதல் கைதி
அவள் இதழின் முத்தங்கள்
காதலுக்கான நித்த தண்டனை
முதல் முத்தம் பதிக்க
என் இதழருகே அவளிதழ்
உம்ம உம்மா உம்மா
டேய் டேய் யாருக்குடா முத்தம்
அருகே படுத்திருந்த நண்பனின் அலறல்
கண்விழித்து பார்க்கிறேன் கடிகாரத்தை
காலை எட்டுமணியை தாண்டியமுள்
இச்சே இச்சே எல்லாம் கனவா