எத்தனை எத்தனை
தாலி கயிற்றில்
தூக்கிலிடப்படும்
காதல்கள்
எத்தனை எத்தனை?
அம்மி மிதிக்கையில்
நசுக்கப்படும்
காதல்கள்
எத்தனை எத்தனை?
அருந்ததி தேடலில்
தொலைந்து போகும்
காதல்கள்
எத்தனை எத்தனை?
அக்னி குண்டத்தில்
பொசுக்கப்படும்
காதல்கள்
எத்தனை எத்தனை?
காதல் சமாதியின்
மீதுதான்
திருமண பந்தல்
கட்டப் படுமா?
இரு உடல்கள்
போகும்
பாதையில்
மலர் தூவும்
சமூகமே
இரு மனங்கள்
இணைய
மலர் தூவ
மறுப்பதேன்?