என் அத்தை மகளே
என்னவளே...!
எனைப்பார்த்தா
நடிக்கிறேன் என்று சொன்னாய்
சற்று யோசித்துப்பார்...
அன்று சொன்ன
வார்த்தைகளை
அந்திப் பொழுது
அவசரப்பயணம்
தலைதூக்கும் நிலவு
தாமரைவிரியும் சத்தம்...!
அத்தனையும்
மாறிவிடும்
ஆனால்...
அத்தை மகளே...!
உன்மீது கொண்ட காதல்
அழியாமல் கிடக்குதடி
மாவடுவாய்...!