உனக்கான காத்திருப்புகளில்

உனக்கான காத்திருப்புகளில் . . .


என் நிழலுக்கும் எனக்கும் இடையே
உரையாடலும் சண்டைகளும்
அதிகம் கூடி போகும் . . .

இதயத்திற்கும் வியர்த்து கொட்டும் . . .

காலம் உறைந்து போகும் . . .

கவிதைகள் ஊற்றெடுக்கும் . . .

விழிகளுக்கும் கால்கள் முளைத்து
உன் வருகையை எட்டி பார்க்கும் . . .

கடந்து செல்பவர்களின்
ஏளன பார்வை பட்ட இடங்களில்
உதிரம் இல்லா காயங்கள் முளைக்கும் . . .

உலகத்தின் எட்டாவது அதியத்தை
பார்க்கும் ஆவல் பூக்கும் . . .

ஒரு பேரழிகியை காணும்
நேரத்தை நோக்கி உயிரும்
ஓட்டம் எடுக்கும் . . .

உன்னோடு பேசி தீர்க்க வேண்டிய
உரையாடல்களை யாருக்கும் தெரியாமல்
மனது ஒத்திகை பார்க்கும் . . .

உன் அப்பாவோ
உன் அண்ணன் தம்பியோ
உன் அம்மாவோ
யாரும் இங்கே கடந்து போகாமல் இருக்க
வேண்டுதல் முளைக்கும்

என்னால்
தேனீர் கடைகாரனுக்கு
வியாபாரம் அதிகரிக்கும் . . .

ஆசையும் ஏக்கமும் எதிர்பார்ப்பும்
அளவு கடந்து கூடி போகும் . . .


இப்படித்தான் காதலி . . .


உனக்கான காத்திருப்புகளில் எல்லாம் . . .


வரமும் சாபமும்
மாறி மாறி தவறாமல் வந்து போகும் . . .
எல்லா நாட்களிலும்
உன் நினைவுகளை
உப்பு மூட்டை தூக்கி சுமந்தபடி . . .

எழுதியவர் : ந.சத்யா (27-Aug-18, 5:15 pm)
பார்வை : 569

மேலே