தனிமை என்னும் பொக்கிஷம்

ஆசைகளால் கைது
செய்யப்பட்டு....
அன்பால் அடிமையாகி
போனேன்....
மெய்யென
நினைத்தவை யாவும்...
பொய்யென
உணர்ந்தேன்...
பல ஏமாற்றங்களை
சந்தித்த பின்னரே..
வெறுமையை
உணர்ந்தேன்....

தனிமை என்னும் பொக்கிஷ
அறையில்...
பித்தம் தெளிந்தேன்....

வேண்டாம் இனி
எந்த உறவும் என
துறவு மேற்கொள்ள
நினைத்து ....
கண்களை கட்டிகொண்டு
தனி அறையில் நின்றேன்....
கண்ணாமூச்சி ஆடியது....
வேண்டாத
நினைவுகள்.....

வழி தெரியா காட்டில்...
விரும்பி பயணம்
செய்ய...
அங்கும்
முகமூடி கொள்ளையரை போல
பின்தொடர்கிறது...
மறக்க நினைத்த
நினைவுகள்....
இனி என்ன தான்
நானும் செய்திட.....???

எழுதியவர் : லீலா லோகிசௌமி (27-Aug-18, 5:58 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 267

மேலே