அடிமையின் ஊடல்

விழி நால் வருட
நிசப்தப் பொழுது,
மங்கும் ஞாயிறு ,
நினைந்த மங்கை...

மெல்லிடை என்னும்
விரிமார் என்னும்
வேற்றுமை உண்டோ
கண்ணொளி கலக்க...

இறுதிக் கதிரொளி
கள்வன் உருவும்
இருளில் கலக்க
தலைவி அவளோ
தனிமை இமைகள்
இணையச் சாயந்தாள்...

தென்றல் தீண்ட
அவன் விரல்
நுனியென விழித்து
திங்கள் கறைமுகம்
என்னவன் நினைவே
ஏக்கம் துளிர்த்தாள்...

கானவும் காட்சியும்
அன்பு முகமே
அமைதி காண
யாது வழியென
தினறித் துடித்தாள்...

கள்வன் களவு
தடயம் யானோ
அரசியின் ஊடல்
அடிமையின் உளறல்
என்பது மெய்யோ...

குளிர்ந்த இரவு
உளர்ந்த இதழின்
நுனிநா நனைய
புணர்ந்த வேளை
மறக்க மணமும்
மறுக்கும் விந்தை...

காமம் காதல்
இரட்டைக் கிளவி
காமம் கலந்த
காதல் மாய்க்க
யானோ வருந்தி
புலம்ப அந்தப்
புறத்தில் இளையவள்...

எழுதியவர் : ராஜேஷ் (28-Aug-18, 5:06 pm)
சேர்த்தது : rajesh7421
பார்வை : 4503

புதிய படைப்புகள்

மேலே