மனித, மிருக நேயம்

நெடுஞ்சாலையில் ஓர் விபத்து
துடி துடிக்க உயிர் போகும் தருவாயில்
இருவரின் உடல்
வழிப்போக்கர் இருவர்
இதைப் பார்த்து அவ்விருவர்
அருகில் வந்து முதலில்
அங்கு சிதறி இருந்த
அவர்கள் பைகளிலிருந்த
மொபைல், பணம் இவற்றை
எடுத்துக்கொண்டு 'தாகம்'
என்று நீர் கேட்ட அவ்விருவருக்கும்
அது கூட தராது அவ்விடத்தை விட்டு அகல
இது இக்கால மனித நேயமோ !

சிறுது நேரம் கழித்து அங்கு வந்த
நாய் ஒன்று அந்த இருவரையும் முகர்ந்து
அங்கிருந்து புலிபோல் பாய்ந்தோடி
கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்
சென்று எப்படியோ தன் பாஷையில் குறைத்து
வாலாட்டி அந்த விபத்து நடந்த இடத்துக்கு
அழைத்து சென்றது .......................
போலீஸ் படையை ................
குற்றுயிராய் இருந்த இருவரில் ஒருவர்
பிழைத்தார்...........
இவர் நன்றி யாருக்கு சொல்வார்
நாய்க்கா.............இல்லை போலிஸ்கா .....
நாய் பாவம் இன்னும் வாலை குறைத்துக்கொண்டு
அங்கேயே கிடக்க........போலீஸ்க்கு
பிழைத்தவர் சார்பில் மறுநாள் சன்மானம்
மறக்காமல் ஒரு பிஸ்கட் போட்டார் நாய்க்கு
போலீஸ் காரர் .....சரி அதாவது செய்தாரே
மனித நேயம் கப்பலேறாமலிருக்க

அந்த நாய்ச்செய்த செயலை எப்படி கூறுவது
விலங்கு நேயமா ......இல்லை நாய் நேயமா
எப்படியோ அது அந்த மனித நேயத்தைவிட
பலமடங்கு உயர்ந்தது ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Aug-18, 12:32 pm)
பார்வை : 115

மேலே