இயற்கையே ஏன் இந்த கோபம்
இயற்கையே ஏன் இந்த கோபம்?
அழகின் உண்மை
நீ ஆடிய ஆட்டத்தில்
புரிந்து கொண்டோம்
தென்றலாய் வீசிய
காற்று புயலாய்
மாறி பிடுங்கி எறிந்த
கோரத்தை கண்டோம்
வளைந்தும் நெளிந்து
இடையை வளைத்து
சென்றிட்ட ஆற்றை
பொங்கி பெருக்கி
பல பல உயிர்களை
வாயில் விழுங்கிய காட்சியை
கண்டோம்
குத்தி கிழித்தும்
அமைதியை காட்டிய பூமி
கோபம் வந்து கோர தாண்டவம்
காட்டி எங்களை கொன்றிட்டாய்
பல பல கட்டிடங்கள்
உன் அசுர வாயில்
போட்டு விழுங்கி கொண்டாய்
இயற்கையை வழிபடும்
மக்கள் அதிகம்
இருந்தும் இயற்கையே
கோபம் கொண்டு
அழித்திட்ட கோலம் கண்டோம்
உனக்கு !
யார் மீது கோபம்? ஏன்
இப்படி பொங்கி எழுகிறாய்?