உண்மை எது, எங்கே
மனிதன் நடை உடை பாவனையில்
பேச்சில் என்று இவை எதிலும்
உண்மை புலப்படலையே
இன்றைய காலகட்டத்தில் .............
எது நிஜம், எது பொய்
தெரியாமல் போகிறதோ .....
பொய் நிஜமாய் நிஜம் பொய் போல்
உலாவிவர , நிஜத்தை தேடி
அலைபவரை பித்தன் என்கிறாரே
இவற்றிற்கெல்லாம் விடிவுண்டு
கண்ணனின் 'கீதையை' படித்தால்
என்றால் , படிப்பதற்கு முன்னரே
அதை படிக்காது விமர்சனம் செய்வோர்............
விஸ்வம் என்றால் பிரபஞ்சம்
அதிலே முழுவதுமாய் வ்யாபித்திருப்பவன்
விஷ்ணு ஆவான் அவன் உருவன் அருவன்
நம்மைப் படைத்தவன் அவனே
அவனே கடவுள் மதம் ஜாதிக்கு அப்பாற்பட்டவன்
கண்ணனாய் வந்து 'கீதை' அளித்தான்
அதைப் படிப்போம், அவனை அறிய
உண்மை அறிய, தெரிய , தெளிய