எனது ஏக்கம் நீயடா

எனது காதலா!
என் காதலை நான் காதலித்தால்
என் காதலன் உன்னை இழந்துவிட்ட
எந்தன் ஏக்கம்!

செந்தமிழ் சொல்லெடுத்து
சொற்சரம் ஒன்று தொடுத்துவிட்டு........
கவிதையின் கருப்பொருளை தொலைத்துவிட்ட
ஒரு கவிஞனின் ஏக்கம் தானோ?

என் இரவோடு விளையாடி
தனிமையில் என்னை தாலாட்டுவது
உனக்கான எந்தன்
ஏக்கம் தானடா!

என் இதய துடிப்போடு உறவாடி
இருவிழியின் கருவிழியாய் புதைந்திருப்பது
உனக்கான எந்தன்
ஏக்கம் தானடா!

கரையும் வானில்
ஒளிரும் வெண்ணிலவில்
சிதறி கிடக்கும் கரைகளும்
உனக்கான எந்தன்
ஏக்கம் தானடா!

தாயாய் வந்து என்னை சேயாய் அணைத்திடு
எனது ஏக்கம் யாவும் தீர்ந்து
நான் மோட்சம் அடைந்திட.........

எழுதியவர் : சோட்டு வேதா (4-Sep-18, 5:20 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 298

மேலே