எழுதுகுழல் இசை

உன்னிடந்தான்
எத்னை அருவியடி
உன் கூந்தலின்
ஒவ்வொரு முடியும்
ஒவ்வொரு அருவியடி

பார்வையில் பாயிது
போதையடி
சற்டென்டு சரிந்தது
என் போதிமரமடி

உன்னை தீண்டிய
தென்றல்
பூக்களை தீண்டுவதில்லை
வாசம் மாறிவிடுமென்று

உன்னைத் தொட்ட
மழைத்துளிகளும்
கடலில் சேர்வதில்லையடி
சுவை மாறிவிடுமென்று

பூவுக்கு வியர்ப்பதில்லை
ஆனால் உனக்காே வியர்க்கிறது
நீ நடமாடும் பூ என்பதனாலோ

பூக்களை ரசிக்க
வீட்டில் பூந்தோட்டம் வைப்பார்கள்
ஆனால் உன் வீட்டில்
பூந்தோட்டமே உன்னை ரசிக்க அல்லவா
வைக்கப்பட்டுள்ளது

உன் வீட்டு பூச்செடி
உன் கைகளால் நடப்பட்டும்
உன் இதழ் போல்
பூக்க முடியவில்லையென
வருந்துகிறது

நீ பிறந்தவுடன்
அழகிகளை படைக்கும்
முயற்சி முடிவுக்கு
வந்திருக்கும்
அதன் முழு
வெற்றியும் நீயே

காதலித்தால்
பசி தூக்கம் வராதாம்

எங்கே

இந்த எழையையும்
கொஞ்சம் காதல் செய்யேன்

எழுதியவர் : ஏ.எச்.என் (7-Sep-18, 6:04 am)
சேர்த்தது : ஏஎச்என்
பார்வை : 44

மேலே