அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா – ஹிந்தோளம்

மணாளனே மங்கையின் பாக்கியம் (1957) படத்தில் தஞ்சை ராமையாதாஸ் இயற்றி, ஆதிநாராயணராவ் இசையமைப்பில் P.சுசீலா, ஹிந்தோள ராகத்தில் பாட, அஞ்சலிதேவி நடனமாடிய அருமையான பாடல் ’அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா’. யுட்யூபில் கேட்டு மகிழலாம்.

ஆரம்ப காலங்களில் சுசீலா பாடிய இனிமை மிக்க பாடல். ஹிந்தோள ராகத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டான பாடல்.

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன் (அழைக்காதே)

எழில் தரும் ஜோதி
மறந்திடுவேனா
இகமதில் நானே பிரிந்திடுவேனா
என்னை மனம் நாடிட சமயம் இதானா (என்னை மனம்)
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா (கனிந்திடும்) - அழைக்காதே

காதலினாலே கானத்தினாலே
காவலனே என்னை
சபையின் முன்னாலே
சோதனை யாகவே
நீ அழைக்காதே (சோதனை யாகவே)

கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா (அழைக்காதே)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-18, 1:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 503

மேலே