கார்முகிலே அது உனதல்ல

நீலமே நீ வானத்தின் அடையாளம்
வெண்மையே நீ சமாதானப் புறாவின் அடையாளம்
ஆரஞ்சு வண்ணமே நீ அந்திப்பொழுதின் அடையாளம்
கார்முகிலே நீ என் அவளின் அடையாளம்
அவள் இதழ்களின் மௌனம் கலைத்தால்
கார்முகிலே அது உனதல்ல
அவள் மின்னல் புன்னகை அடையாளம் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-18, 4:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 233

மேலே