திரி சங்கின் முழக்கம்

நாரின் அசிங்கமும் பூவின் அழகும் சேர்ந்தால்தானே பூமாலை
அரிசி வெந்தால்தானே பந்தியில் சோறு
மனிதா உன் வாழ்வின் கடினங்கள் தானே உன்னை உயர்த்தும் படிக்கற்களாகும்
ஊதாத திரி சங்கு முழங்குமா
போராடத வாழ்க்கை வெல்லுமா
உன் தாய் உன்னை சுமந்து போராடினாளே அதைவிட உன் போராட்டம் பெரியதா

விடியலில் கனவுகள் கலைவது முடிவதற்கல்ல ,ஒரு புதிய துவக்கத்திற்காகத்தான் கனவுகளும் கலைகிறது
நீர் ஓட மறுத்தால் ஜீவநதிகள் உண்டாகுமா
குறியற்ற அம்புகள் இலக்கைத் துளைக்குமா
எறும்புகளின் ஓட்டத்தையும் சுமையையும் பார்
தேனீக்களின் கூட்டுதானே தேன்
விளையாட்டுகள் வேடிக்கையாக்கப்பட்டது வருமானத்திற்காக
வாழ்கை விளையாட்டுதான் நீ இரங்கி விளையாடு உன் தன் மானம் தப்பிக்கும்
வெறியற்ற போராளின் வாள் வெட்டிப் பிளக்குமா
அப்துல் கலாம் செய்தித்தாள் விற்றது பசி மட்டும் தணிக்க அல்ல
தன் கனவுகள் கலையாமல் காப்பாற்றவும் தான்
எளிதாக வளைந்தால் அது இரும்பாகாது
அடிபடாத இரும்பு வாளாகாது
புலி பதுங்குவது பாயத்தான்
அலைகள் வீழ்வது எழத்தான்
எழுத்தாணியின் முனையைத் தாங்கிய ஓலைதான் திருக்குறள்
வெட்டாத ஆடு பிரியாணி ஆகாது
ஏர் உழாத நிலம் விளையாது
மலையைத் துளைக்காத எலியுண்டோ
கடலைத் தூக்குவதும் காற்றுதானே
பலநூறுமுறைத் தோற்று தானே முதல் மின் விளக்கு எரிந்தது
இறகில்லா மனிதன் பறக்க வில்லையா
வானம் அவன் முன் அடிபணிய வில்லையா
முயற்சி முதல் படி
உழைப்பு அடுத்தபடி
லட்சியம் உடும்புப் பிடி
வெற்றிகள் உன் வாசர் படி
இது தான் நெற்றியடி

சுத்தியில் அடி படாத ஆணி உள்ளிறங்குமா
சூரியனின் ஆதாரம் எங்கே
அந்தரத்தில் நிற்க வில்லையா
ஒளி தரவில்லையா
உலகில் நம்பிக்கை இல்லாதவர்களே அனாதைகள்
இருளிர்க்குச் சொந்தமானவர்கள்
வெளியே வா வாழ்வில் நம்பிக்கை வை
மலையை மடுகாக்கு கடலை அள்ளித் தெளி சூரியனைப் பந்தாடு
பிரபஞ்சத்தை உன் காலடியில் விழச் செய்
எழு எழு வேங்கையென எழு
புயலென சுழல்
சிகரங்களின் உயரங்களை உன் கரம் கொண்டு தொடு
புதிரானதாயிரம் உன் பொறுமை ஆயுதம்
அறிவானதோர் வரம் இனி இல்லைத் தாமதம்
வீரு நடை கொள் பயணம் தொடரும் தலைமேல் மகுடம்

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (9-Sep-18, 9:16 pm)
சேர்த்தது : rajeshkrishnan9791
பார்வை : 95

மேலே