காதல்

பார்வையால் ஓர்
ஆணும் பெண்ணும்
இணைந்திடலாம் ,அதன்பின்னே
ஆடலாம், பாடலாம்
நாளெல்லாம் பேசி மகிழலாம்
கட்டி அணைத்து முத்தம் கொடுத்து
காமத்தின் எல்லையைத்தொட்டும்விடலாம்
ஒருபோதும் இவ்வுறவில் அவர்கள்
காதலை தொடுவதில்லை ,எதுவரை?
இருவரும் தங்கள் இதயம்
திறந்து உறவுகொள்ளும்வரை -ஏனெனில்
இதயமே காதலின் தலைவாசல் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Sep-18, 8:52 am)
Tanglish : kaadhal
பார்வை : 210

மேலே