அறத்துப் பால் -------செல்வம் நிலையாமை
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின்,
செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. . . . . . . . . .
(பாடல் விளக்கம்) அறுசுவை உணவுகளை மனைவி அமரந்து ஊட்ட, மறுபிடி உணவுக்கு மறுத்த செல்வந்தர்களும் ஒரு காலத்தில் எங்கோ ஒரு இடத்தில் கூழ்காக ஏங்கி நிற்க்கும் நிலை வருமெனில் செல்வம் தான் நிலை என்று மனதில் கருதுவது நன்று அன்று. . . . . . . .
. (பொருள்) அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.
தமிழ் கவிதைகள் வீழ்வது நானாயினும் வாழ்வது என் தாய்தமிழே...