ஆசிரியருக்கு நன்றி

அரிதினும் அரிது கற்றல் அரிது
அதை
எளிதினும் எளிதாய் மாற்றி
தேன்பாகாய் அறிவில் ஊற்றி
கல்வித்தேரில் நம்மை ஏற்றி
அறிவோடு அறத்தையும் புகட்டி
புத்தகத்தைத் தாண்டிய புதுமையைச் சொல்லி
புத்துலக மேடையில் சாதனைச் செல்வங்களாய்
இளைய மேதைளாய்
நம்மை நிலைநாட்டும்
நிகரற்ற ஆசான்களுக்கு நன்றிகள் கூற மொழியுண்டோ??
நன்றிகள் கூற மொழியுண்டோ??

எழுதியவர் : சக்தி பவானி. கி.சு (15-Sep-18, 8:11 pm)
சேர்த்தது : SAKTHI
பார்வை : 70

மேலே