தோணல்

நீ சலங்கை ஒலி படம் பார்த்திருக்கியா
அதுல ஜெயப்பிரதா
அவ புருஷனோட சேர்ந்தாப்புல
ட்ரெயின் ல கதவுப்பக்கமா நின்னுக்கிட்டிருப்பா
கீழ பிளாட்ஃபார்ம் ல
கமல் ஹாசன்
அந்த பழைய கேமரா லென்ஸ் வழியா
அதைப் பார்க்கிறப்போ
அவ கூட அவன் நிக்கிறதா
அந்த ஒரு நிமிஷம் அவனுக்குத் தோணும்
"சில நுணுக்கமான காட்சிகளைப்
பார்க்கிறப்போ எல்லாம்
எனக்கு உன்னோட நினைவு வரும்
எப்போவும் உன்னை
நினைச்சுகிட்டே
இருக்கணும்ன்றதுக்காகவே
இதுமாதிரி நுணுக்கமான காட்சிகளை
பார்க்கணும்னு தோணும் ம்ம்"

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (18-Sep-18, 1:50 pm)
பார்வை : 112

மேலே