வானின் போர்
![](https://eluthu.com/images/loading.gif)
வானக களத்தில்
போர் நடந்து, எங்கும்
ஒரே மேகப் புழுதி.
உளைக் களத்தின் நெருப்பாய்
பகலில் பற்ற வைத்த
சூரிய அடுப்பின் சாம்பல் கூட
குருதியின் சிகப்பாய்.....
ஏன் வானமே ..!
நீயும் போர் செய்யக்
கற்றுக் கொண்டாயோ,
எங்கள் பொல்லாத
பூமியைப் பார்த்து.....?!