நாற்றங்கால் பிரிந்த நாற்றுகள்

பிறந்த மண்ணின் தோழமையில்
வேறு வயல் பயணிக்கும்
நெல் நாற்றுகள்...

நாற்றங்கால் எனும்
பிறந்த வீடு பிரிந்ததால்
கண்ணீர் விடுகிறதோ...

பசித்திடும் வயிற்றுக்கு
சோறு போட நெல்
விளைவிக்கும் கடமையில்
சோகம் தொலைந்து போகும்..

புகுந்த வீட்டில்
பசுமைத் தோரணம்
கட்டுகையில் சுகானுபவம்
இனிதே வந்து சேரும்...
👍😀🌹👏🙋🏻‍♂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (21-Sep-18, 8:40 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 305

மேலே