ஆறு மனமே ஆறு
சூரியனின் வெப்பமே அதுஇயக்கப் போதுமானது
எவ்வளவு சுற்றியும் அலுக்காமலே பூமி
திரும்ப திரும்ப முயற்சியில் கரைதொடும் அலை
இன்பமோ துன்பமோ கிடைப்பதை ஏற்பதே வாழும்கலை
ஒவ்வொரு காயத்திற்கும் மருந்துண்டு
ஒவ்வொரு வலிக்கும் நிவாரணமுண்டு
ஒவ்வொரு கஷ்டத்துக்கும் முடிவுண்டு
ஒவ்வொரு மனஉலைச்சலுக்கும் தீர்வுண்டு
தாகத்தை தீர்க்க தண்ணீர் போல
சோகத்தை தீர்க்குமா கண்ணீர்!?
நிலத்தை பசுமையாக்கும் மழைநீர் போல
மனதை மகிழ்விக்குமா சிந்தும்செந்நீர்!?
ஆறுதல் கிடைப்பது அறிதென ஆகியகாலத்தில்
யாரது அழுதாலும் ஆறுதல் மொழிதருவோம்
பேரதை சொல்லிப்பேசி தேறுதல் தருவோம்
ஆறுபோல ஆறுதலும் தொலைந்திட வேண்டாம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
