தேநீர் முத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
அதிகாலையில் எனை எழுப்பி அவன் தரும்
சக்கரையில்லாத தேநீர்...
முன் விழும் முடி ஒதுக்கி நெற்றியில் அவன் பதிக்கும் உதடு ஒட்டாத முத்தம்...
குறுகுறுப்பூட்டும் அவன் குறுந்தாடியின்
இன்பம் தரும் இம்சைகளோடு...
விடிந்தது என் உற்சாகமான காலைப்பொழுது...