என் இனிய பேனா

என் இனிய
பேனாவே...
சந்ததிகள் பல
கடந்தாலும் உன்
புகழ் குறையாதம்மா...

துன்பத்தில் உன்னை
தொட்டு காகிதம்
நனைத்தால்
பறந்தது....துயர்
கிடைத்தது நிம்மதி..

உன் உடல்
கொண்டு என்னை
செதுக்கினேன்...
கவியாக...
பெற்றேன் பல
வெற்றிகள் உன்னாலே...

என் திறமைகளை
நீ உலகுக்கு
படம் போட்டாய்...
வந்தது புகழ்
உன்னாலே ...

உன் வீரத்தால்
என்னை புரட்சிகள்
பல எழுத்தில்
படைத்தாய்...

நீ நனைத்த
பாசக்காகிதம்
தந்த இன்பம்
இந்த அலைபேசிகள்
தரவில்லையடி பேனாவே...

எழுதியவர் : (25-Sep-18, 10:32 am)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
Tanglish : en iniya pena
பார்வை : 35

மேலே