காந்தியம் சாத்தியம் தான்

காந்தியம்
சாத்தியம் தான்....

காந்தி நோட்டை
காதலிக்காமல்
காந்தியத்தை நெஞ்சுருக
நேசித்தால்...

காந்தியம்
சாத்தியம் தான்....

வயிற்று சோறை
பதுக்க இன்னொரு
வயிறில்லை நமக்கு

காசு பணத்தை
பதுக்கும் மூடனே
புரியவில்லையா உனக்கு ....

நெறி பிறழா நேர்கோட்டில்
மனித மலர்கள்
பயணித்தால்
காந்தியம் இப்போதே
சாத்தியம் .....

சத்தியம் தவறா
நாவினை நாம் வளர்ப்போம் ....
காந்தியம் சாத்தியம் என்று
நெஞ்சில் தீ வளர்ப்போம் ....

துரைப்பாண்டிய மூர்த்தி பெங்களூரு

எழுதியவர் : (25-Sep-18, 8:33 pm)
பார்வை : 51

மேலே