காதல்

சொந்தங்களெல்லாம் இருந்தும்
சொந்தம் தேடி அலைந்தேன் ,
உந்தன் கண்களின் பார்வை
என்மீது பட்டதும் நான் தேடிய
சொந்தத்தின் விதை அதில்
கண்டுகொண்டேன் நான், அது
என் மனதில் பதிந்து காதல்
அரும்பாய் முளைத்திட ,
மகிழ்ந்தேனடி நான் , நான் தேடிய
சொந்தம் கிடைத்திட , நம்
காதல் இணைந்திட ;
சொந்தங்கள் மறக்கவில்லை நான்
வந்து சேர்ந்த தேடிய புது சொந்தம்
என் மனதில் ஆனந்தம் புகுத்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Sep-18, 4:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 331

மேலே