சித்திரமாய் உனை வரைய
சித்திரமாய் உனை வரைய
*******************************************
சேத்திரம் பலநாடி தேவார
இசைபாடி மகிழ்வித்த அடியார்க்கு
பாத்திரமாய் நீயிருந்து பரமனிடம்
பரிந்துரைத்த பரிசே பங்கயமே
சித்திரமாய் உனைவரைய முத்துப்பல்
உதிர்த்திடும் புன்னகையின் பேரழகே -- உன்
புத்திரர் அனைவரும் தடைகளற்று
நலம்வாழ அருள்கூட்டு சாலாட்சியே !