பொய் முகங்கள்

பொய் முகங்கள் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

அன்று
திருவள்ளுவர்
எழுதி வைத்தான்
துன்பம் வரும்போது
சிரியுங்க என்று...

இன்று
நாமும் சிரிக்கின்றோம்
துன்பம் வரும்போது
மற்றவர்களுக்கு.

அக்டோபர் இரண்டில்
அண்ணல் காந்திஜெயந்தி
கொண்டாடி மகிழ்கிறோம்
கொள்கைகளை காற்றில்
பறக்க விட்டுவிட்டு....

மழைவெள்ளம் வந்தால்
மக்களுக்கு திண்டாட்டம்
அரசியல்வாதிகளுக்கு
இங்கு கொண்டாட்டம் !

வெள்ளநிவாரண நிதி
வழங்கும்போது
ஆடம்பர மேடையில்
அப்பாவி மக்களிடம்
பொய் முகம் காட்டும்
இந்நாட்டு மன்னர்கள் !

என்று தணியும்
இந்த விளம்பரதாகம்
அண்ணல் காந்தி
வாழ்ந்த நாட்டில்
வெட்கக்கேடு
மலிவான அரசியல்வாதிகள்!.

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (2-Oct-18, 9:18 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : poy mugankal
பார்வை : 400

மேலே