தாய்மைப் பேறு

2011 ல் புதுக் கவிதை

உலகில் எவ்வுயிர்க்கும்
விலை மதிப்பற்றது தாய்மைப் பேறு;

எங்குமிருக்கும் இறைவன்
கண்ணுக்குத் தெரிவதில்லை;

பெண்ணைப் படைத்தான்,
பெண்ணில் தாய்மையை படைத்தான்,
தாய்மையில் தன்னைப் படைத்தான்;
தன்னில் அன்பு, பாசம், தியாகம் படைத்தான்;
அவளுக்கு நிகர் யார்!

2015 ல் மரபுக் கவிதை

தாய்மைப் பேறு - நிலைமண்டில ஆசிரியப்பா

உலகில் எவ்வுயிர்க் குமேவிலை யுயர்ந்தது
நிலையாய் தாய்மைப் பேறொன் றல்லவோ?
எங்கு மிருக்கும் இறைவன் எல்லோர்
பங்கமில் கண்ணுக் குத்தெரிவ தில்லையே! 1

பெண்ணை, பெண்ணில் தாய்மையைப் படைத்தான்,
தாய்மையில் இறைவன் தன்னைப் படைத்தான்;
அன்னையினில் பாசம், தியாகம் படைத்து
அன்பைப் படைத்தான் அவளுக்கு நிகர்யாரே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-18, 9:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே