படுக்கையறைக் கதவைச் சாத்துங்கள்

என்னால் முடியாததை
ஒரு எலிக் குஞ்சு சாத்தியமாக்கியது;

வயது அறுபது
படுக்கையறைக் கதவை சாத்தினால்
மனைவி ஆட்சேபம்;

பிள்ளைகள் இருக்கிறார்கள்
சாத்தாதீர்கள் கதவை;

வீட்டிற்குள் அடுக்களையில்
எலிக் குஞ்சு நுழைந்து விட்டது;

இரண்டு நாட்களாக சுற்றித் திரிகிறது
அனைத்து இடங்களிலும் எட்டிப் பார்க்கிறது;

படுக்கையறைக் கதவைச் சாத்துங்கள்!
எலிக் குஞ்சுக்கு இருக்கும்
உரிமை கூட எனக்கில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-18, 8:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 170

மேலே