அவனிருக்க அழிவேது

அவனிருக்க அழிவேது..?

சூழவலம் வருகின்ற சதியை
தூரவகற்றிடும் நாரணனே
தொழுவேன் நின்
மலர் பாதம் பணிந்தே. !

குறி வைக்கும்
அம்பென்ன செய்யும் - இறையே
உன் குடியிருப்பை
கூர் சொல்லா கொல்லும்..?

எரிகின்ற தணல்
மூழ்கி எழுவேன்
சாம்பல் ஆவேனோ
மலராகி வாழ்வேன்..!

யுத்தம் பல கண்ட பின்னும்
ஓர் தோல்வி ஏமில்லையின்னும்
நேர்கொண்டு போரிடும் சாதி
நீசரே என் முன் வாரீர்..!

சோர்ந்து வீழ்ந்திட மாட்டேன்
சோகம் தோள் கொண்டு சாயேன்
வெற்றி முரச்சென்றும் செவியில் - இறை துணை என்றுமென் வழியில்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (4-Oct-18, 2:30 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 161

மேலே