வான் நோக்கி

....... *வான் நோக்கி.........*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
வானை தொட்டிடும் ஆசையில் தான்
வளர்கிறது எல்லா சிறுசெடியும்
விண்ணை நோக்கிய பயணத்தில்
விழாமல் நிமிர்ந்து நிற்பதற்கே
மண்ணில் ஆழ வேர் புதைத்து
மருளா மனதுடன் வளர்கிறது
மனிதா !!
உன்னை நீயும் ஒருபோதும்
உயர்வாய் எண்ண மறவாதே
மண்ணில் உனக்கு இப்பிறவி
விண்ணைத் தாண்டியும் வளர்வதற்கே
சிற்சிறு செடியையும் கவனித்து
ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்து...
க.செல்வராசு..
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱