மழைக்காலம்
இளவேனிற் காலத்தில்
இமை களைத்த கதிரொளியும்,
அளவாக அதில் கொஞ்சும்
அதீத சாரலும் புனைந்து,
மிதமான மண்வாசனை
மிருதுவாக நாசி துவாரத்தில்
இதமாய் சுவாசிக்கும் இத்தருணத்தில்...
வலி பொறுக்கத் தாளாமல்
ஒலி எழுப்பிக் கதறும் தாய்க்குலம்,
நலிந்த நிலையில் விழிபிதுங்கி
எலி சிக்கிய பொறிபோல,
இடி முழக்கம் ஒருபுறம்
வடியா வெள்ளம் மறுபுறம்,
நெடிய ஒலி கேட்டு
மடிய நேரிடுமோ என்ற எண்ணம்...
ஏழுநிற வானவில் பூத்து
சூழுகின்ற கார்முகிலை அழைத்துவந்து
வாழுகின்ற உறவுகளை வஞ்சிக்காது
கூழுக்குக் குறை மறையச் செய்திட்டால்,
கூர் தீட்டிய கோல்களைக் கிடத்தி
ஏர் பிடித்த கரங்களை உயர்த்தி
வேர் தடித்த வேளாண்மை செய்து
பார் போற்றிட வாழ்ந்திடுவோம்...