ஆப்பிள் விழுந்தால் மனிதா புவிஈர்ப்பு

பனிபொழியும் காலை நனிநல்ல பூக்கள்
கனிகுலுங்கும் வண்ண மணிமா மரக்கிளைகள்
ஆப்பிள் விழுந்தால் மனிதா புவிஈர்ப்பு
தோப்பில்தேங் காய்விழுந் தால் ?

------கடைசி அடி கேள்விக்கு
அதுவும் புவிஈர்ப்புதான் என்று எண்ணாமல்
அருந்துவதற்கு இளநீரு என்று நீங்கள் சிந்தித்தால்
நீங்கள் இலக்கியம் எழுதப் பொருத்தமானவர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-18, 9:32 am)
பார்வை : 64

மேலே