மேகமே

மேகங்களே மேகங்களே நீ நிலையில்லாமல் செல்கிறாயே
இங்கு தான் ஓய்வெடுத்து செல்லவே வாராயோ ?
உன் போலே என் மனமும் நிலை கொள்ளவில்லை
ஏனோ மேகமே உன்னை கண்டால் என் மனம் குதூகலம் கொள்ளுமே
மேகமே மேகமே நீ கருமை கொண்டால்
மழையின் சாரலைக் காண மனம் ஏனோ அலை கொள்ளுமே
நீயோ களைந்து வெண்மை போர்த்தி செல்கையிலே
மனம் கொஞ்சம் ஏமார்ந்து போகுமே
நீயே பாசாங்கு காட்டும் பொழுது புன்னகை தழுவுவேன்
நீயோ வெறுமை காட்டும் பொழுது நானும் வெறுமை கொள்வேன்
நீ உருவங்கள் மாற்றும் விந்தை என் மனமும் கற்றது போல
உனைப் போலே என் உள்ளமும் மாறி மாறி
விளையாடுதே மேகங்களே ! மேகங்களே !
உன்னை கண்டு கண்டு ஆனந்த கூத்தாடுகிறேன்

எழுதியவர் : பிரகதி (5-Oct-18, 11:30 am)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : megame
பார்வை : 353

மேலே